உச்சநீதிமன்ற உத்தரவு எதிரொலி : அக்.18 முதல் சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி

உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, சபரிமலையில் வரும் 18ஆம் தேதி முதல் பெண்களை அனுமதியளிப்பது தொடர்பாக, கேரள முதலமைச்சருடன் தேவஸ்தானம் இன்று ஆலோசனை நடத்துகிறது.
உச்சநீதிமன்ற உத்தரவு எதிரொலி : அக்.18 முதல் சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி
x
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதிக்கவேண்டும் என, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், வரும் 3-ம் தேதி திருவிதாங்கூர் தேவஸ்தான  போர்டின்  ஆலோசனை கூட்டம், அதன் தலைவர் கே.பத்மகுமார் தலைமையில்  நடைபெறுகிறது. இதில், சபரிமலையில் அக்டோபர் 18ம் தேதி முதல் பெண்களை அனுமதிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது தொடர்பாக தேவஸ்தான போர்டின் தலைவர் பத்மகுமார், இன்று முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். சபரிமலையில் பெண்களுக்கான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்