மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை - தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்

மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை - தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்
x
மதுரை அருகே தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை நிறுவனர் ஹக்கீம்,  தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் விளக்கம் பெற்றுள்ளார்.அதில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை மற்றும் மத்திய செலவினங்களுக்கான நிதிக்குழு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்தற்காக எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக எந்த நிறுவனத்திற்கும் டெண்டர் ஒதுக்கப்படவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்