நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்து - 8 பேர் உயிரிழப்பு...

திருச்சி சமயபுரம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்து - 8 பேர் உயிரிழப்பு...
x
சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த விஜய், மஞ்சுநாதன் உள்ளிட்ட 13 பேர்  திருச்சி அருகே வாங்கிய புதிய  வீட்டை பார்க்க காரில் சென்றனர்.  இன்று அதிகாலை திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்த  சரக்கு லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில் 2 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 5  பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுங்கசாவடி அருகே இரவு நேரத்தில் விளக்குகள் எரிவதில்லை என்றும் , அங்கு போக்குவரத்து அதிகாரிகள் சோதனை நடத்துவதால் சரக்குகளை ஏற்றி வரும்  வாகனங்கள் நிறுத்தப்படுவதால்  அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.Next Story

மேலும் செய்திகள்