"ஜி.எஸ்.டிக்குள் பெட்ரோல், டீசல் - தமிழக அரசு தடையாக உள்ளது" - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வர தமிழக அரசு, தடையாக உள்ளதாக மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே குற்றம்சாட்டியுள்ளார்.
ஜி.எஸ்.டிக்குள் பெட்ரோல், டீசல் - தமிழக அரசு தடையாக உள்ளது - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
x
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வர தமிழக அரசு, தடையாக உள்ளதாக மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே குற்றம்சாட்டியுள்ளார். சென்னை வியாசர்பாடியில் நடைபெற்ற, முன்னாள் மேயர் சிவராஜின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் அத்வாலே, ஜி.எஸ்.டி-க்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வரப்பட்டால், அவற்றின் விலை குறையும் என்று தெரிவித்தார். இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கூடாது என பிரதமர் மோடியிடம் வலியுறுத்தப் போவதாகவும் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்