நக்சலைட்டுகள் நடமாட்டம் : ஊட்டி காவல் நிலையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

நக்சலைட்டுகள் நடமாட்டத்தை அடுத்து, ஊட்டி அருகே காவல் நிலையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நக்சலைட்டுகள் நடமாட்டம் : ஊட்டி காவல் நிலையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
x
நீலகரி மாவட்ட எல்லைப்பகுதியான வயநாடு, பூங்கோடு பாலம் எனுமிடத்தில் கால்நடை மருத்துவக்கல்லூரி உள்ளது. இங்கு வந்த நக்சலைட்டுகள், அங்கிருந்த காவலாளியை துப்பாக்கியை காட்டி மிரட்டி, செல்போனை பறித்துச் சென்றதை அடுத்து, அப்பகுதியில் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, காட்டுயானைகள் அவர்களை  விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், நக்சலைட்டுகள் நடமாட்டத்தை அடுத்து, சேரம்பாடி, மசினகுடி, தேவாலா ஆகிய காவல் நிலையங்கள் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்