ரூ.20 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்...
மண்ணச்சநல்லூர் அருகே 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 ஆயிரத்து 100 கிலோ பான்மசலா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்த போலீசார், பெண் உள்ளிட்ட 3 பேரை கைது செய்துள்ளனர்.
* மண்ணச்சநல்லூர் அருகே 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 ஆயிரத்து 100 கிலோ பான்மசலா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்த போலீசார், பெண் உள்ளிட்ட 3 பேரை கைது செய்துள்ளனர். பூனாம்பாளையம் பகுதியில் போலீஸார் வாகன சோதனை நடத்தினர். வேன் ஒன்றை மறித்து பார்த்தபோது மூட்டை, மூட்டையாக பான்பராக், ஹான்ஸ், குட்கா, போலி சிகரெட் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
* சுப்பாய்பண்ணை கிராமத்தில் மூக்கன் வீட்டின் குடோனில் பான்பராக், குட்கா மூட்டைகள் பதுக்கி வைத்து மண்ணச்சநல்லூர், சமயபுரம், லால்குடி, புள்ளம்பாடி, கல்லக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனை செய்ய இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
Next Story