சுயநிதி கல்லுாரிகளில் தகுதியான ஆசிரியர்கள் இல்லை - ஆசிரியர் பல்கலைக்கழகம் குற்றச்சாட்டு

தமிழகத்தில், கல்லுாரிகளுக்கே செல்லாமல் மாணவர்கள், பி.எட்., படித்து வருவதாகவும், பல சுயநிதி கல்லுாரிகளில் தகுதியான ஆசிரியர்கள் இல்லை என்றும், ஆசிரியர் பல்கலைக்கழகம் குற்றம் சாட்டியுள்ளது.
சுயநிதி கல்லுாரிகளில் தகுதியான ஆசிரியர்கள் இல்லை - ஆசிரியர் பல்கலைக்கழகம் குற்றச்சாட்டு
x
தமிழகத்தில், கல்லுாரிகளுக்கே செல்லாமல் மாணவர்கள், பி.எட்., படித்து வருவதாகவும், பல சுயநிதி கல்லுாரிகளில் தகுதியான ஆசிரியர்கள் இல்லை என்றும், ஆசிரியர் பல்கலைக்கழகம் குற்றம் சாட்டியுள்ளது. 

இது குறித்து ஆசிரியர் பல்கலைக்கழக பதிவாளர் ரவீந்திரநாத் தாகூர் வெளியிட்ட அறிவிப்பில்,  நடப்பாண்டில் பி.எட்., படிப்பில் சேர்ந்த மாணவர்களின் விபரங்கள் மற்றும்  ஆசிரியர்களின் விபரங்களை, கல்லுாரி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதில் தவறான தகவல்களை பதிவிட்டால், கல்லுாரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். 

மேலும், கல்லுாரிகளுக்கே செல்லாமல் மாணவர்கள் படித்து வருவதாகவும், தகுதியான ஆசிரியர்கள் கல்லுாரிகளில் இல்லை என புகார் வருவதாகவும் ஆசிரியர் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இது போன்ற புகார்கள் எழாத அளவிற்கு கல்லுாரிகள் செயல்பட வேண்டும் எனவும் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்