பால்பாக்கெட்டுகள் திருடுவதை வழக்கமாக கொண்ட மர்ம நபர் : கேமராவில் பதிவான காட்சிகள்

சென்னை திருவொற்றியூரில் 10 க்கும் மேற்பட்ட பால் விற்பனை கடைகளில்,பால் பாக்கெட்களை திருடி வந்த மர்ம நபர் குறித்து பதிவாகியுள்ள காட்சிகள் வெளிவந்துள்ளன.
பால்பாக்கெட்டுகள் திருடுவதை வழக்கமாக கொண்ட மர்ம நபர் : கேமராவில் பதிவான காட்சிகள்
x
காலடிப்பேட்டை சந்தை மற்றும் வன்னியர் தெரு பகுதிகளில் உள்ள பால் விற்பனை கடைகளில்,பால்பாக்கெட்கள் குறைவாக இருப்பதை கண்டு பால்முகவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனிடையே அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்ததில், அதிகாலை ஆவின் பால் பாக்கெட் லோடுகளை லாரிகள் இறக்கிவிட்டு சென்றதும், இரு சக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர் கோணிப்பையில் பால் பாக்கெட்டுகளை வாடிக்கையாக திருடி செல்வது தெரியவந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்