56 தொன்மை வாய்ந்த சிலைகள் மீட்பு - ஐஜி பொன் மாணிக்கவேல் அதிரடி சோதனை

சென்னை - சைதாப்பேட்டையில் தொழிலதிபர் ரன்வீர் ஷா என்பவர் வீட்டில் சிலை தடுப்பு பிரிவு நடத்திய அதிரடி சோதனையில் 56 தொன்மை வாய்ந்த சிலைகளும் ஏராளமான கல் தூண்களும் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன.
56 தொன்மை வாய்ந்த சிலைகள் மீட்பு - ஐஜி பொன் மாணிக்கவேல் அதிரடி சோதனை
x
சிலை தடுப்பு பிரிவு ஐஜி - பொன் மாணிக்கவேல் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிகாலை முதல் பல மணி நேரம் நடத்திய சோதனையில் தோண்ட தோண்ட தொன்மைவாய்ந்த சிலைகளும் அபூர்வ கல் தூண் கலைசிற்பங்களும் சிக்கின. இந்த சோதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐ.ஜி - பொன் மாணிக்கவேல் இது முழுக்க முழுக்க கோவில்களில் இருந்து திருடப்பட்டவை என்றார். ஒரு கோவிலையே மொட்டை போட்டு விட்டார்கள் என்றும் அவர் வேதனை தெரிவித்தார். 
தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டின் ஒரு பகுதியை இடிக்க திட்டம்

தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சிலைகள் அனைத்தும் கும்பகோணம் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. மீதமுள்ள சிலைகளை ரன்வீர் ஷா வீட்டில் வைத்தே போலீசார் பாதுகாத்து வருகின்றனர். வீட்டில் 21 தூண்களும், 7 பெரிய சிலைகளும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பழமையான தூண்களை பெயர்த்தெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சிலைகளும் தூண்களும் வெளியே எடுப்பதில் சிர‌ம‌ம் உள்ளதால், வீட்டின் ஒரு பகுதியை இடிக்க சிலைகடத்தல் தடுப்பு போலீசார் திட்டமிட்டுள்ளனர். Next Story

மேலும் செய்திகள்