யார் இந்த ரன்வீர்ஷா?

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழில் அதிபர் ரன்வீர்ஷா வீட்டில் நேற்று தொன்மையான கலைப்பொருட்களை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைப்பற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ரன்வீர்ஷா யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
யார் இந்த ரன்வீர்ஷா?
x
மும்பை உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆடை ஏற்றுமதி தொழில் செய்து வரும் ரன்வீர்ஷா அரவிந்த்சாமி கஜோல் நடித்துள்ள மின்சார கனவு படத்திலும் நடித்துள்ளார். அவர் நடித்த காட்சிகளை தற்போது பார்க்கலாம். தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டின் ஒரு பகுதியை இடிக்க திட்டம். தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சிலைகள் அனைத்தும் கும்பகோணம் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. 

மீதமுள்ள சிலைகளை ரன்வீர் ஷா வீட்டில் வைத்தே போலீசார் பாதுகாத்து வருகின்றனர். வீட்டில் 21 தூண்களும் 7 பெரிய சிலைகளும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பழமையான தூண்களை பெயர்த்தெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சிலைகளும் தூண்களும் வெளியே எடுப்பதில் சிர‌ம‌ம் உள்ளதால், வீட்டின் ஒரு பகுதியை இடிக்க சிலைகடத்தல் தடுப்பு போலீசார் திட்டமிட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்