டிஜிட்டல் முறையில் நிலஅதிர்வை பதிவு செய்யும் வசதி

சேலம் வானிலை ஆராய்ச்சி மையத்தில் நில அதிர்வை அறிய உதவும் சிறப்பு மென்பொருள் வசதி உருவாக்கப்பட்டு உள்ளது.
டிஜிட்டல் முறையில் நிலஅதிர்வை பதிவு செய்யும் வசதி
x
தமிழகத்தில் நிலநடுக்கத்தை அளவிடும் சிஸ்மோகிராபி, சென்னை, சேலம் மற்றும் கொடைக்கானலில் உள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்கனவே நில அதிர்வை அளவிட இருந்த அனலாக் முறையை மாற்றி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு டிஜிட்டல் கருவி பொருத்தப்பட்டது. ஆனால், உடனடியாக நில அதிர்வை அறிய உதவும் மென்பொருள் மற்றும் கணினி வழங்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது 60 லட்சம் ரூபாய் செலவில் அந்த கணினி மென் பொருள் வசதியுடன் டிஜிட்டல் கருவியில் இணைக்கப்பட்டு உள்ளது. இதனால் இனி சேலத்தில் இருந்தே நில அதிர்வை பார்த்து தெரிவிக்க இயலும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்