நீக்கப்பட்ட ரஜினி மன்ற நிர்வாகி -தாக்குதலுக்கு ஆளானார்

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர், தாக்குதலுக்கு ஆளானார்.
நீக்கப்பட்ட ரஜினி மன்ற நிர்வாகி -தாக்குதலுக்கு ஆளானார்
x
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர், தாக்குதலுக்கு ஆளானார். ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட, தென்றல் முருகன் என்பவர் தனது நீக்கம் குறித்து வாட்ஸப்பில் பதிவு போட்டுள்ளார். இதற்கு எதிர் கருத்துகளை மன்ற நிர்வாகிகள் சிலர் போட்டுள்ளனர்.ஒரு கட்டத்தில் மோதல் ஏற்பட்டு, அவர்கள், தென்றல் முருகனை தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, தாக்குதல் தொடர்பாக, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் இளவரசன் மற்றும் ரவி மீது நடவடிக்கை எடுக்க கோரி தென்றல் முருகனின் மனைவி விஜயா, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்