ஆறுமுகசாமி ஆணையத்தில் சுப்பையா விஸ்வநாதன் ஆஜர்

ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கைகளுக்கும், விசாரணை ஆணையத்தில் ஆஜரானவர்களின் வாக்குமூலங்களுக்கும் முரண்பாடு ஏன் ? என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஆறுமுகசாமி ஆணையத்தில் சுப்பையா விஸ்வநாதன் ஆஜர்
x
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று அப்பல்லோ நிர்வாக அலுவலர் சுப்பையா விஸ்வநாதன் ஆஜரானார். அவரிடம், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற நாட்களில் பதிவான சிசிடிவி காட்சிகள் குறித்தும் எழுப்பப்பட்டது.அப்பல்லோ வெளியிட்ட மருத்துவ அறிக்கைகளுக்கும், பலரது வாக்குமூலங்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் குறித்தும் சுப்பையா விஸ்வநாதனிடம்  ஆணையம் கேள்வி எழுப்பியது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த அப்பல்லோ மருத்துவர்கள் வெங்கட்ராமன், பத்மாவதி, புவனேஸ்வரி ஷங்கர் மற்றும் அருட்செல்வன் ஆகியோரும் ஆஜாரானார்கள். அவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தினர்.இதேபோல், அதிமுக முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியனும் ஆணையத்தில் ஆஜரானார். ஏற்கெனவே கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட விசாரணையின்போது மனோஜ் பாண்டியன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், குறுக்கு விசாரணை நடத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்