'வார்தா' புயலில் மாயமான மீனவர்களுக்கு 4 லட்சம் இழப்பீடு கோரி மனு: தமிழக அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

வார்தா புயலில் மாயமான மீனவர்களின் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வார்தா புயலில் மாயமான மீனவர்களுக்கு 4 லட்சம் இழப்பீடு கோரி மனு: தமிழக அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
x
கடந்த 2016-ஆம் ஆண்டு வார்தா புயல் வீசியபோது, கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 9 மீனவர்கள் மாயமாகினர். இதையடுத்து, 9 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து 1 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டது. பேரிடர் மேலாண்மை நிதியத்தில் இருந்து  4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்த தொகை, இதுவரை வழங்கப்படவில்லை என கூறி, பிரதீப் குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, 4 வாரங்களுக்குள் இது குறித்து பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 24ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.

Next Story

மேலும் செய்திகள்