பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்

அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்
x
* தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் 15 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாத ஊதியமாக 7 ஆயிரத்து 700 ரூபாய் வழங்கப்படுகிறுது. இந்நிலையில், சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் ஆசிரியைகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

* ஆசிரியர்களின் இந்த போராட்டத்தை ஒட்டி, அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் குறைந்த ஊதியம் வழங்கப்படுவதாகவும்  கூலி வேலைக்கு சென்றால் கூட, அதிக சம்பளம் கிடைக்கும் எனவும் பகுதி நேர ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்