பாஜக செயற்குழு கூட்டம் : 12 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்

மத்திய அரசின் சாதனைகளை அனைத்து மக்களுக்கும் எடுத்து செல்வது, கோவில் சொத்துகளை மீட்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாஜக செயற்குழு கூட்டம் : 12 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்
x
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், பா.ஜ.க  மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.   இந்த கூட்டத்தில்  கட்சியின் மாநில தலைவர் தமிழிசை மற்றும் இல.கணேசன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு உள்ளனர். மேலும்  800க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்களும், சட்டமன்ற பாராளுமன்ற தொகுதிகளின் பொறுப்பாளர்களும்  கலந்து கொண்டுள்ளனர். இந்த செயற்குழு கூட்டத்தில், மத்திய அரசின் சாதனைகளை அனைத்து மக்களுக்கும் எடுத்து செல்வது, கோவில் சொத்துகளை மீட்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்