திருவிழாக் கோலமாக காட்சி தரும் புஞ்சை புளியம்பட்டி சந்தை

சிறுதானியங்கள் முதல் வீட்டுக்கு தேவையான அத்தனை பொருட்களும் கிடைக்கும் இடமாக இருக்கிறது புஞ்சை புளியம்பட்டி சந்தை.
திருவிழாக் கோலமாக காட்சி தரும் புஞ்சை புளியம்பட்டி சந்தை
x
* ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புஞ்சை புளியம்பட்டி கிராமத்தின் பெயரை சொன்னாலே அப்பகுதி மக்களுக்கு அங்கு நடக்கும் சந்தையின் பெயர் தான் நினைவுக்கு வரும். காரணம் அங்கு அடுத்தடுத்து 2 நாட்கள் நடக்கும் சந்தை தான். வாரந்தோறும் வியாழக் கிழமை நடக்கும் இந்த பொதுச் சந்தையில் எல்லா பொருட்களும் கிடைக்கிறது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

* இயற்கையில் இருந்து கிடைக்கும் பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக மூங்கில் கூடைகள், விசிறிகள், பாய் உள்ளிட்டவை இங்கு கிடைக்கிறது. சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் செயல்படும் பிரம்மாண்ட சந்தை இது

* பருப்பு வகைகள், சிறுதானியங்கள், காய்கள், கீரைகள், பழங்கள் என எல்லாவற்றையும் இங்கு ஒரே நேரத்தில் வாங்கிச் செல்ல முடியும் என்பதும் இந்த சந்தையின் சிறப்பு.

* அத்தியாவசிய பொருட்கள் தாண்டி முறுக்கு, மிக்சர் போன்ற தின்பண்டங்களும் இங்கு சுவை மாறாமல் குறைவான விலையிலேயே கிடைக்கிறது.. 

* விவசாயத்திற்கு தேவைப்படும் விதை நெல், நடவுக்கு தேவைப்படும் வெங்காயம், சிறுதானிய விதைகள் உள்ளிட்டவற்றை வாங்கிச் செல்ல பல மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் இங்கு வருகிறார்கள்.

* பல தலைமுறைகளாக இங்கு வந்து விற்பனை செய்யும் வியாபாரிகளும் உண்டு... பல தலைமுறைகளை தாண்டி சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்களையும் இங்கே பார்க்க முடியும்... 

* சீரகசம்பா, மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய அரிசி வகைகளும், மூட்டையாக மொத்த விலையில் கிடைக்கிறது. இந்த அரிசியை மலிவாக வாங்கிச் சென்று தங்கள் பகுதியில் விற்பனை செய்யும் வியாபாரிகளும் அதிகம்.

* மாடு கட்டுவதற்கான கயிறுகள், சணல் கயிறுகள், வத்தல், வடகம் போன்ற பொருட்களையும் நீங்கள் வாங்கிச் செல்ல ஏற்ற இடம் இது. 

* கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி என 4 மாவட்டங்களை இணைக்கும் இடம் இது என்பதால் இங்கு மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. புதன் கிழமை கால்நடை சந்தையும், வியாழக் கிழமைகளில் பொதுச் சந்தையும் இங்கே நடக்கிறது. 

* காலை சந்தைக்கு வந்தால் நீங்கள் கை நிறைய பொருட்களை வாங்கிச் செல்வதோடு உங்களுக்கு புதுவித அனுபவத்தையும் இந்த சந்தை தரும் என்பது நிச்சயம்.


Next Story

மேலும் செய்திகள்