108 திவ்ய தேசங்களுள் சிறப்பிடம் பெற்ற ஒப்பிலியப்பன் கோவிலின் சிறப்புகள்...

108 திவ்யதேசங்களில் 13வது இடம் பெற்ற பெருமைமிகு ஒப்பிலியப்பன் கோயில் குறித்து ஒரு செய்திதொகுப்பு...
108 திவ்ய தேசங்களுள் சிறப்பிடம் பெற்ற ஒப்பிலியப்பன் கோவிலின் சிறப்புகள்...
x
* தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் சாலையில் இருக்கிறது ஒப்பிலியப்பன் கோயில். தமிழக திருப்பதி, பூலோக வைகுந்தம் என்றெல்லாம் அழைக்கப்படும் ஒப்பிலியப்பன் கோயில் 108 திவ்ய தேசங்களுள் சிறப்பிடம் பெற்ற ஒரு கோயிலாக உள்ளது.

* ஒப்பிலியப்பன் கோயிலின் மூலவராக காட்சி தருகிறார். அவருடன் கருணையின் வடிவமாக பூமாதேவி ஒரே சன்னதியில் அருள்பாலிக்கிறார். மார்க்கண்டேயருக்கு மகாலட்சுமியாக மகளாக பூமியில் அவதரித்த காரணத்தாலேயே அவர் பூமாதேவி என்ற பெயரை பெற்றார்.

* வயோதிக வடிவத்தில் மகாலட்சுமியை பெருமாள் பெண் கேட்டு வந்துள்ளார். ஆனால் சிறுமியான மகாலட்சுமிக்கு உணவில் உப்பு கூட சேர்க்க தெரியாது என மார்க்கண்டேயர் கூறியதாகவும், அதன் காரணமாகவே இன்றும் கோயில்களில் உப்பில்லாத உணவு பெருமாளுக்கு பிரசாதமாக படைக்கப்படுவதாகவும் வரலாறு கூறுகிறது.  

* உப்பு இல்லாத பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர் என்பதாலேயே இந்த கோயிலில் உறையும் பெருமாள் ஒப்பிலியப்பன் என்ற பெயரை தாங்கியிருக்கிறார். வேண்டுதல்களை நிறைவேற்றும் விதமாக வெல்லம், அரிசி போன்ற பொருட்களை எடைக்கு எடை துலாபாரம் கொடுக்கும் பக்தர்கள் அதிகம்.

* பூமாதேவியை மணமுடித்த பெருமாள் அவரை தன் வலதுபுறத்திலேயே வைத்து அவரை பிரியாமல் காட்சி தருகிறார். கணவன், மனைவி இடையே பிரச்சினைகள் இருப்பின் அது குறித்து மனமுருக வேண்டினால் அவை எல்லாம் பனி போல விலகும் என்ற நம்பிக்கை உண்டு.

* நம்மாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார் என நான்கு ஆழ்வார்களால் பாடல் பெற்ற தலம் இது. திருப்பதிக்கு செல்ல முடியாத சூழல் உள்ளவர்கள் இங்கு வந்து பிரார்த்தனைகளை நிறைவேற்றி செல்லலாம். 

* கோயிலின் பிரகாரத்தில் ஆண்டாள் பாடிய பாசுரங்கள் வண்ண ஒவியங்களாக காட்சி தருகிறது. புரட்டாசி மாதம் நடக்கும் பிரம்மோற்சவ விழா, பங்குனி பிரம்மோற்சவ நிகழ்வு என ஒவ்வொரு விழாவுமே இங்கு சிறப்பாக நடக்கிறது. 

* பக்தர்கள் எப்போதும் நீராடக் கூடிய வகையில் பகலிராப்பொய்கை குளம் இந்த கோயிலில் உள்ளது. தங்கள்  வேண்டுதலை நிறைவேற்ற இங்கு வரும் பக்தர்கள் குளத்தில் நீராடிய பின் பெருமாளை வணங்குவது வழக்கம். 

* கும்பகோணத்தில் இருந்து இந்த கோயிலுக்கு சென்று வர ஏராளமான பேருந்து வசதிகளும் உண்டு.. புரட்டாசி மாதத்தில் வணங்க வேண்டிய இடங்களில் ஒப்பிலியப்பன் கோயிலும் ஒன்று. 


Next Story

மேலும் செய்திகள்