"ஹெல்மெட் அணிவது கட்டாயம்" - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக்கும் நீதிமன்ற உத்தரவுகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
* இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாந்த் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஹெல்மெட் அணியாமல் செல்வதால் விபத்துக்களின் போது அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாக நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.
* ஹெல்மெட் கட்டாயம் தொடர்பான நீதிமன்ற உத்தரவு மற்றும் தமிழக அரசின் அரசாணையை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
* மோட்டார் வாகன சட்ட விதிகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
* ஹெல்மெட்டை கட்டாயமாக்கிய அரசாணையை அமல்படுத்துவது குறித்து அக்டோபர் 23ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Next Story

