லஞ்ச வழக்கில் கைதான வாகன ஆய்வாளர் லாக்கரில் 10 கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளி கண்டுபிடிப்பு

லஞ்ச வழக்கில் கைதான கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளருக்குச் சொந்தமான, வங்கி லாக்கர்களில் 10 கிலோ தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லஞ்ச வழக்கில் கைதான வாகன ஆய்வாளர் லாக்கரில் 10 கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளி கண்டுபிடிப்பு
x
கடலூரில், மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் 21 வங்கி கணக்குகள், 6 லாக்கர்கள் மற்றும் அவருடன் கைது செய்யப்பட்ட உதவியாளர் செந்தில்குமாரின் வங்கி கணக்குகளையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் முடக்கி வைத்திருந்தனர்.

இந்த நிலையில், 2 வங்கிகளில் பாபுவுக்கு சொந்தமான லாக்கர்களை,  அவரது மனைவி மங்கையர்க்கரசி முன்னிலையில், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார், சோதனை மேற்கொண்டனர். 

சுமார் 4 மணிநேரம் நடத்தப்பட்ட சோதனையில், லாக்கர்களில், சுமார் 10 கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளிப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆய்வு முடிந்ததும், நகைகளை, மீண்டும் லாக்கர்களில் வைத்து போலீசார் சீல் வைத்தனர்.  பாபுவுக்கு சொந்தமான மேலும் 3 வங்கி லாக்கர்களை, ஓரிரு நாளில் போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர். 

இந்த பணிகள் முடிந்ததும், தங்கம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
 


Next Story

மேலும் செய்திகள்