பாலியல் தொந்தரவு வழக்கில் மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

சிவகங்கையில், பாலியல் தொந்தரவு அளித்தது தொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் காவல் ஆய்வாளருக்கு 5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறு, மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
பாலியல் தொந்தரவு வழக்கில் மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
x
* சிவகங்கையில், பாலியல் தொந்தரவு அளித்தது தொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் காவல் ஆய்வாளருக்கு 5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறு, மனித உரிமைகள்  ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

* சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் செந்தாமரை கண்ணன் தாக்கல் செய்த மனுவில், பெண் உதவி காவல் ஆய்வாளர் நர்மதாவுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தொடர்பான புகாரில், 5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என, தனக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரனுக்கும் மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ராஜா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு, மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்தது.

Next Story

மேலும் செய்திகள்