கோகுல்ராஜ் கொலை வழக்கு : விசாரணை அக்டோபர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

பொறியில் பட்டதாரி கோகுல் ராஜ் கொலை வழக்கில் கோகுல் ராஜ் தோழி மற்றும் சுவாதியின் தாயார் உள்ளிட்டோரிடம் நேற்று விசாரணை நடைபெற்ற பின் அக்டோபர் ஒன்றாம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.
கோகுல்ராஜ் கொலை வழக்கு : விசாரணை அக்டோபர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
x
பொறியில் பட்டதாரி கோகுல் ராஜ் கொலை வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோகுல் ராஜ் தோழி மற்றும் சுவாதியின் தாயார் உள்ளிட்டோரிடம் நேற்று  விசாரணை நடைபெற்றது. அப்போது சம்பவத்தன்று அர்த்தாரீஸ்வரர் கோயில் மலையடிவாரத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் திரையிடப்பட்டது. அதனை பார்த்த ஸ்வாதியின் தயார் செல்வி, அதில் இருப்பது யார் என தெரியாதது என கூறினார். அப்போது குறுக்கிட்ட வழக்கறிஞர், யுவராஜை காப்பாற்ற முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். 

உணவு இடைவேளைக்கு பிறகு கோகுல்ராஜின் நண்பர் கார்த்திக் ராஜாவிடமும் அரசு தரப்பு வழக்கறிஞர் விசாரணை நடத்தினார். சிசிடிவி காட்சியில் வருவது கோகுல்ராஜும் சுவாதியும் என கார்த்திக் ராஜா கூறினார். இதைத்தொடர்ந்த ஈரோடு ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் கதிரேசன் மற்றும் சாட்சிகளிடம்   விசாரணை நடைபெற்றது. இதையடுத்து வழக்கு அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்