திருச்சியில் விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது நிகழ்ந்த சோகம்

திருச்சியில் விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது, புதை மணலில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழந்துள்ள சம்பவம், அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது நிகழ்ந்த சோகம்
x
திருச்சியில் விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது, புதை மணலில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழந்துள்ள சம்பவம், அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முசிறியில் உள்ள காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகளை  கரைப்பதற்காக ஊர்வலம் நடைபெற்றது. இதில் மேட்டுபாளத்தை சேர்ந்த வடிவேல் என்பவரது மகன் சாமிநாதன், தனது நண்பர்களுடன் கலந்து கொண்டார். சிலையை கரைத்து விட்டு, குளித்து கொண்டிருந்தபோது, மாணவன் சாமிநாதன் எதிர்பாரத விதமாக புதை மணலில் சிக்கி, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், மீட்கப்பட்டுள்ள அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்