குட்கா வழக்கு : மாதவராவ், சீனிவாச ராவுக்கு மேலும் 3 நாள் சிபிஐ காவல்

குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் மற்றும் சீனிவாச ராவ் ஆகியோரை மேலும் 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதியளித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குட்கா வழக்கு : மாதவராவ், சீனிவாச ராவுக்கு மேலும் 3 நாள் சிபிஐ காவல்
x
குட்கா ஊழல் வழக்கில் குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவ ராவ், உமா சங்கர் குப்தா, சீனிவாச ராவ், உள்ளிட்ட 5 பேரை சிபிஐ கடந்த 5ஆம் தேதி கைது செய்தது. அவர்களை நீதிமன்ற அனுமதியுடன் சி.பி.ஐ. தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. இவர்களின் காவல் முடிந்ததை அடுத்து, அவர்கள் 5 பேரும் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் மாதவராவ் மற்றும் சீனிவாச ராவ் ஆகியோரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ மனுத்தாக்கல் செய்தது. அதை விசாரித்த நீதிபதி திருநீலபிரசாத், மாதவராவ், சீனிவாசராவ் ஆகியோரை மேலும் மூன்று நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ க்கு உத்தரவிட்டார். மேலும் 3 பேர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். மாதவராவ் மற்றும் சீனிவாசராவ் ஆகியோரை திங்கட்கிழமை மாலை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த  வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்