மனைவியை கழுத்தை நெரித்து கொன்று விட்டு தற்கொலை என நாடகமாடிய கணவன்...
சென்னையில் மனைவியை பெல்ட்டால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் மனைவியை பெல்ட்டால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவிக நகரை சேர்ந்த சுரேஷ் என்பவர், கடந்த 11 ஆம் தேதி தமது மனைவி கல்பனா, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.


பின்னர் கல்பனாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில், கழுத்து நெரிக்கப்பட்டு இறந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில்,கணவர் சுரேஷ் பெல்ட்டால், கழுத்தை நெரித்ததை ஒப்புக் கொண்டதால், கைது செய்யப்பட்டார்.
Next Story