மனித தோலுக்கு இணையான "போலஸ் தோல் திசு" கண்டுபிடிப்பு : மதுரை பேராசிரியர் அசத்தல்

புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க உதவிடும் வகையில் போலஸ் எனும் தோல் திசுவை கண்டு பிடித்துள்ள மதுரையை சேர்ந்த உதவி பேராசிரியர் செந்தில்குமாருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.
மனித தோலுக்கு இணையான போலஸ் தோல் திசு கண்டுபிடிப்பு : மதுரை பேராசிரியர் அசத்தல்
x
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் செந்தில்குமார். இவர், புற்றுநோய் கதிரியக்க சிகிச்சைக்கு தேவைப்படும், மனித திசுக்களுக்கு இணையான போலஸ் எனப்படும் செயற்கை தோல் திசுவை கண்டுபிடித்துள்ளார். 



இந்த போலஸ் செயற்கை தோல் திசு,கழுத்து, தலை, மார்பகம் மற்றும் தோல் புற்று நோய் சிகிச்சைக்கு, எளிதாகவும், பலமுறை பயன்படுத்தும் வகையில் உதவிடும் என கூறப்படுகிறது. இதற்கான ஆராய்ச்சி கட்டுரையை, ராஜஸ்தானில் நடைபெற்ற கருத்தரங்கில் செந்தில்குமார் சமர்பித்த நிலையில் அவருக்கு, முதல் பரிசு கிடைத்துள்ளது. இதனையடுத்து உதவி பேராசிரியர் செந்தில்குமா​ருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்