மேட்டூர் காவேரி ஆற்றில் முதல் நாளில் மட்டும் 60 விநாயகர் சிலைகள் கரைப்பு

சேலம் மாவட்டம் முழுவதிலும் இருந்து மேட்டூர் காவேரி ஆற்றுக்கு 60க்கும் மேற்பட்ட சிலைகள் கொண்டுவரப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டு காவேரி நீரில் கரைக்கப்பட்டன.
மேட்டூர் காவேரி ஆற்றில் முதல் நாளில் மட்டும் 60 விநாயகர் சிலைகள் கரைப்பு
x
சேலம் மாவட்டம் முழுவதிலும் இருந்து மேட்டூர் காவேரி ஆற்றுக்கு 60க்கும் மேற்பட்ட சிலைகள் கொண்டுவரப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டு காவேரி நீரில் கரைக்கப்பட்டன. சிலைகளை கரைக்க வந்த பக்தர்கள் காவேரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம்



* விநாயகர் சதூர்த்தி விழாவை ஒட்டி நெல்லை மாவட்டம் முழுவதும் 501 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து அனைத்து விநாயகர் சிலைகளையும் வரும் ஞாயிற்று கிழமை பல்வேறு இடங்களில் கரைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. 

* முதல்கட்டமாக நெல்லை சந்திப்பு துவரை ஆபீஸ் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த அரசடி விநாயகர் சிலை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு வண்ணார்பேட்டை தாமிரபரணி அற்றில் கரைக்கப்பட்டது.  


Next Story

மேலும் செய்திகள்