லஞ்சம் வாங்கியதாக மோட்டார் வாகன ஆய்வாளர் கைது : 48 வங்கி கணக்குகள் முடக்கம்

விழுப்புரத்தில் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளரின் 48 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
லஞ்சம் வாங்கியதாக மோட்டார் வாகன ஆய்வாளர் கைது : 48 வங்கி கணக்குகள் முடக்கம்
x
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு கைது செய்யப்பட்டார். இதையடுத்து கடலூரில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த 200 சவரன் நகைகள், 35 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனையின்  போது பாபு மற்றும் அவரது மனைவி, மகள் பெயரில் 48 வங்கிக் கணக்குகள் இருப்பது தெரியவந்ததையடுத்து அவை அனைத்தும் முடக்கப்பட்டன. மேலும் வங்கிகளில் இருந்த 6 லாக்கர்களை முடக்கிய அதிகாரிகள் அடுத்த வாரத்தில் அதனை சோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்