ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான விசாரணை : காணொலி மூலம் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கிய லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் சிங்கப்பூர் மருத்துவர்களிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான விசாரணை : காணொலி மூலம் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு
x
லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் சிங்கப்பூர் மருத்துவர்களிடம், காணொலி காட்சி மூலம் விசாரிப்பதற்கான வசதி, விசாரணை
ஆணையத்தில் இல்லாததால் தலைமைச்செயலகம் நாமக்கல் மாளிகையில்
இருந்து அவர்களிடம் விசாரணை செய்ய திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அரசியல் ரீதியான விமர்சனம் எழுப்பபடலாம் என்று கருதி  சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்பாயத்தில்
இருந்து காணொலி மூலம் விசாரணை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த மாதத்தோடு அனைத்து மருத்துவர்களிடம் விசாரணையும், சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் மேற்கொள்ளும் குறுக்கு விசாரணையையும் முடிக்க ஆணையம் திட்டமிடப்பட்டுள்ளது.
 
அக்டோபர் முதல் வாரத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் விசாரணை செய்ய ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது.

அக்டோபர் 18 ம் தேதிக்குள் அனைத்து விசாரணையையும் முடித்து,  அக்டோபர் 24ம் தேதிக்குள் அரசிடம் அறிக்கை சமர்பிக்க ஆணையம் தயாராகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்