ஜெயலலிதா மறைவு செய்தி வெளியாவதற்கு முன்பே "அடுத்த முதல்வர் பதவியேற்பு பணிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டார்"
பதிவு : செப்டம்பர் 13, 2018, 06:01 AM
ஜெயலலிதாவின் மறைவு குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே, அடுத்த முதல்வர் பதவியேற்க முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டதாக அவரது செயலாளர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஜெயலலிதா உயிரிழந்ததாக டிசம்பர்  5ம் தேதி மாலை 6 மணிக்கு செய்தி வெளியானதை தொடர்ந்து, அது வதந்தி என அப்பல்லோ மறுப்பு செய்தி  வெளியிட்டது. 

அதேநேரம், அன்று இரவு ஜெயலலிதா உயிரிழந்தாக முறையாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

இந்தச் சூழலில் அன்று மாலையே புதிய முதல்வர் பதவியேற்பதற்கான பணிகளை செய்ய அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டதாக, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான அவரது செயலாளர் ரமேஷ் சந்த் மீனா வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனால், ஆணையத்திற்கு பல்வேறு சந்தேகங்களை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமான நிலையில் இருப்பது தெரிந்தும், அவரை சிகிச்சைக்கு வெளிநாட்டிற்கு  அழைத்து செல்ல ஆளுநர் பரிந்துரை செய்யாதது ஏன் என ரமேஷ் சந்த் மீனாவிடம் ஆணைய வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

184 views

பிற செய்திகள்

தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி...

ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் மழை பெய்து வருகிறது.

102 views

மஹாவீர் பிறந்தநாள் - ஜெயின் சமூகத்தினர் சிறப்பு வழிபாடு...

ஈரோடு இந்திரா நகரில் ஈரோடு இந்திரா நகரில் ஜெயின் கோவிலில் மஹாவீர் பிறந்தநாளையொட்டி ஜெயின் சமுதாயத்தினர் சிறப்பு வழிப்பாடு மேற்கொண்டனர்

12 views

4 லிட்டர் பெட்ரோலை திருமண பரிசாக வழங்கிய நண்பர்கள்...

கடலூர் மாவட்டம் குப்பன்குளத்தில் திருமண பரிசு பொருளாக 4 லிட்டர் பெட்ரோல் வழங்கப்பட்டது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

19 views

சம்பா பயிர்கள் கருகுவது என்பது தவறான தகவல் - அமைச்சர் காமராஜ்...

கடை மடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கைகள் தீவிரம் - அமைச்சர் காமராஜ்...

12 views

தினசரி சந்தையில் ஆய்வு செய்த உயர்நீதிமன்ற நீதிபதி...

வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் உள்ள தினசரி சந்தை கழிவுகளை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி நேரில் ஆய்வு செய்தார்.

25 views

மணல் லாரி மோதி இளைஞர் பலி - லாரியை மறைத்து வைத்திருந்த பள்ளி சூறையாடல்...

உயிர்பலி ஏற்படுத்திய மணல் லாரி மறைத்து வைக்கப்பட்டிருந்த பள்ளியை பொதுமக்கள் சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

112 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.