பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு குறித்து முதலமைச்சர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்
பொறியியல் பட்டதாரிகளுக்கான செயல்திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு மேம்படுத்துதல் குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரி கூட்டமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பொறியியல் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துவது குறித்த ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் தமிழ்நாடு தகவல் தொடர்பு தொழில் நுட்பவியல் கொள்கை 2018-ஐ முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்.
Next Story