காவல் உதவி ஆய்வாளருக்கு பாலியல் தொந்தரவு : மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்த பெண் அதிகாரி

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்பிசிஐடி தலைமை காவலருக்கு 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததுடன் அவரை பணி நீக்கம் செய்யவும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவல் உதவி ஆய்வாளருக்கு பாலியல் தொந்தரவு : மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்த பெண் அதிகாரி
x
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி காவல் நிலைய துணை ஆய்வாளர் நர்மதாவுக்கு, எஸ்.பி.சி.ஐ.டி தலைமை காவலர் செந்தாமரைக் கண்ணன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. 

இது தொடர்பாக புகார் அளித்தும் சிவகங்கை எஸ்.பி. ராஜசேகரன் அவருக்கு உறுதுணையாக இருப்பதாகவும், எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனித உரிமை ஆணையத்தில் நர்மதா புகார் தெரிவித்து இருந்தார். 

இதனை விசாரித்த மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன், தலைமை காவலர் செந்தாமரைக் கண்ணனுக்கு 3 லட்சம் அபராதம் விதித்ததோடு, அவரை பணி நீக்கம் செய்யவும்  உத்தரவிட்டார். 

அவருக்கு துணையாக இருந்த சிவகங்கை காவல் கண்காணிப்பாளர் ராஜசேகருக்கு இரண்டு லட்ச ரூபாய் அபராதம் விதித்ததோடு, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டது. 

மேலும், அபராத தொகையை ஒரு மாதத்திற்குள் நர்மதாவிற்கு வழங்கவும், அவரது பணி உயர்வு குறித்து பரிந்துரை செய்யவும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. 

இதுபோல, மகளிர் காவலர்களிடம் இருந்து வரும் புகார்கள் மீது டிஜிபி உரிய நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்