அண்ணா பல்கலை. முறைகேடு விவகாரம் : 2 பேராசிரியர்களிடம் தீவிர விசாரணை

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு நடைபெற்றதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
அண்ணா பல்கலை. முறைகேடு விவகாரம் : 2 பேராசிரியர்களிடம் தீவிர விசாரணை
x
அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவர்களின் விடைத்தாள் மறுமதிப்பீட்டில், மோசடியில் ஈடுபட்டதாக,  அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உட்பட 10 பேர் மீது, கடந்த மாதம் 31-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக, பேராசிரியர் விஜயகுமார் மற்றும் சிவக்குமார் ஆகிய இருவருக்கும் சம்மன் அனுப்பி இன்று ஆஜராகுமாறு, லஞ்ச ஒழிப்புத்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் அடிப்படையில் விஜயகுமார் மற்றும் சிவக்குமார் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்