ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு
x

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் சார்பில் பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட பசுமை தீர்ப்பாயம், இதுதொடர்பாக விசாரிக்க  ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க அண்மையில் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முழுமையான ஆய்வு நடத்திய பிறகே ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாகவும், விசாரணை ஆணையம் அமைக்க பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரமில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக பணிகளுக்கு அனுமதி அளித்தால், ஆலையை செயல்படுத்த முற்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, விசாரணை குழு தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி, வஜீப்தார் விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார். எனவே இன்று மாலைக்குள் புதிய நீதிபதி நியமிக்கப்படுவார் என தெரிகிறது. 





Next Story

மேலும் செய்திகள்