உயர்கல்வி தொடர முடியாமல் குழந்தைத் தொழிலாளராகும் பெண் பிள்ளைகள்

ஒசூர் அருகே உயர்கல்வி படிக்கும் வசதியில்லாததால், மாணவிகள் குழந்தை தொழிலாளராகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
உயர்கல்வி தொடர முடியாமல் குழந்தைத் தொழிலாளராகும் பெண் பிள்ளைகள்
x
* ஒசூர் அருகே உயர்கல்வி படிக்கும் வசதியில்லாததால், மாணவிகள் குழந்தை தொழிலாளராகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. 

* அங்குள்ள தொளுவபெட்டா கிராமத்தில் குடிநீர், சாலை, சுகாதாரம், பேருந்து உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை எனக் கூறப்படுகிறது. இன்னும் கொடுமை என்னவென்றால், நடுநிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள், போதிய வசதி இல்லாததால் குழந்தை தொழிலாளராக மாறும் நிலை உள்ளது. 

* ஈரோடு, கோவை உள்ள நூற்பாலைகளுக்கு பெண் பிள்ளைகளை பெற்றோர்கள் வேலைக்கு அனுப்பி வைக்கின்றனர். இல்லையென்றால், அறியாத வயதிலேயே பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். 

* இதனால் பெண் குழந்தைகள் உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். இந்தநிலை மாற அரசு உதவ வேண்டும் என்பதே தொளுவபெட்டா கிராம பெண் குழந்தைகளின் வேண்டுகோளாகும்.
 

Next Story

மேலும் செய்திகள்