மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு : முருகன், கருப்பசாமிக்கு நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் முருகன் மற்றும் கருப்பசாமிக்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு : முருகன், கருப்பசாமிக்கு நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு
x
இந்த வழக்கில், தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முருகன் மற்றும்  கருப்பசாமி கைது செய்யப்பட்டனர். இவர்களது ஜாமீன் மனு 7 முறை தள்ளுபடி செய்யப்பட்டட நிலையில், இன்றுடன் நீதிமன்ற காவல் முடிவடைந்ததால், அவர்களை விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, அவர்களின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 10-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையே, நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை பார்த்ததும், 127 நாட்களாக சிறையில் அடைத்து தற்கொலைக்கு தூண்டாதீர்கள் எனவும் என் வாழ்வை முடித்து விடுவதால் ஆதாயம் அடைவது யார் எனவும் முருகன் ஆவேசத்துடன் கூறினார். இதையடுத்து, முருகன், கருப்பசாமி இருவரையும் மதுரை சிறையில் போலீசார் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்