13 மாவட்ட ஆய்வுக் கூட்டத்தை முடித்தார் முதல்வர் பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 13 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தை முடித்துள்ளார்.
13 மாவட்ட ஆய்வுக் கூட்டத்தை முடித்தார் முதல்வர் பழனிசாமி
x
மாவட்ட வாரியாக ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்தி வந்தார். கடந்த சனிக்கிழமையன்று காஞ்சிபுரம் ஆட்சியருடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, அரியலுார், பெரம்பலுார் மாவட்ட ஆட்சியர்களுடன் நேற்று ஆய்வு கூட்டம் நடத்தினார். இதையடுத்து, இன்று காலையில் புதுக்கோட்டை, கரூர், விருதுநகர் மாவட்டங்களின் ஆட்சியர்களுடனும், பிற்பகலில் நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆட்சியர்களுடனும் ஆய்வு நடத்தினார். அதில் உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். இதுவைர 13 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வுக் கூட்டத்தை முதலமைச்சர் முடித்துள்ளார். சட்டம் - ஒழுங்கு, நலத்திட்டட பணிகள் உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டடது. தொடர்ந்து, மற்ற மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆய்வு நடத்த இருக்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்