ஏழ்மையில் வாடும் 120 மாணவர்களுக்கு காலை உணவை வழங்கும் ஆசிரியர் - முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்

சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் படிக்கும் 120 மாணவர்களுக்கு தினமும் காலை உணவை வழங்கி வருகிறார் தமிழாசிரியர் ஒருவர்..
ஏழ்மையில் வாடும் 120 மாணவர்களுக்கு காலை உணவை வழங்கும் ஆசிரியர் - முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்
x
சென்னை கொடுங்கையூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தமிழாசிரியராக பணிபுரிந்து வருபவர் இளமாறன். தினமும் காலை இறைவழிபாட்டின் போது மாணவர்கள் சோர்வாக இருப்பதும், அடிக்கடி மயங்கி விழுவதும் தொடர்ந்து வந்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர் இளமாறன் விசாரித்த போது மாணவர்களில் பலர் காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வருவது தெரியவந்தது. ஏழ்மை காரணமாக அவர்களால் சாப்பிட முடியாத நிலை இருப்பதையும், இப்படி தினமும் 120 பேர் வருவதையும் உணர்ந்து, அவர்களுக்கு உணவு வழங்க முடிவெடுத்தார். அதன்படி தினமும் அந்த மாணவர்களுக்கு காலை உணவை கொடுக்கும் பணியை தொடங்கினார் இளமாறன். தினமும் காலை அம்மா உணவகத்தில் இருந்து மாணவர்களுக்கு தேவையான இட்லி மற்றும் பொங்கலை வாங்கிக் கொண்டு வந்து மாணவர்களுக்கு கொடுக்க தொடங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்