ஹெல்மெட் கட்டாயம் : வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்களுடன் வாக்குவாதம்

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவை தொடர்ந்து, பல இடங்களில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்.
ஹெல்மெட் கட்டாயம் : வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்களுடன் வாக்குவாதம்
x
இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவை தொடர்ந்து சென்னையில், போக்குவரத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், பல இடங்களில் வாகன ஓட்டிகள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதைக் காணமுடிகிறது. பலர், தங்களுக்கு இது தொடர்பான அறிவிப்பு தெரியவில்லை என்றும், இது குறித்து முதலில்  முறையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
எனவும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

சாலை விபத்துகளில் இருசக்கர வாகனங்களே அதிகம் சிக்குவதாகவும், எனவே தான், வாகனத்தின் பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர் போக்குவரத்து போலீசார்.

ஹெல்மெட் அணியாததற்கு வாகன ஓட்டிகள் பல்வேறு காரணங்களை கூறுவதாக காவல்துறையினர்  குறிப்பிடுகின்றனர்.

ஹெல்மெட் அணியாமல் இருசக்கரவாகனம் ஓட்டியவர்கள் மீது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 9 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது, சென்னை போக்குவரத்து காவல்துறை.

இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து ஹெல்மெட் போடாதவர்கள் மீது ஒரே நாளில் 750 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்