சென்னையில் விரைவில் மின்சார பேருந்து - அமைச்சர் எம் .ஆர் விஜயபாஸ்கர்

சென்னையில் வெகு விரைவில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் விரைவில் மின்சார பேருந்து - அமைச்சர் எம் .ஆர் விஜயபாஸ்கர்
x
மின்சார பேருந்துகள் இயக்குவது தொடர்பாக, இங்கிலாந்து நாட்டின் சி -40 என்ற நிறுவன அதிகாரிகளுடன், தலைமை செயலகத்தில், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மின்சார பேருந்துக்கான உள்கட்டமைப்பை உருவாக்குவது, சென்னையில் எந்தெந்த வழித்தடங்களில் மின்சார பேருந்துகளை இயக்குவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறினார். இதில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டவுடன் வெகு விரைவில் மின்சார பேருந்துகள் சென்னையில் இயக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்