ஐஏஎஸ் தேர்வில் காப்பியடித்த தமிழக ஐபிஎஸ் அதிகாரி சபீர்கரீம் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கம்

ஐ.ஏ.எஸ். தேர்வில் காப்பியடித்த கேரளாவை சேர்ந்த தமிழக கேடர் ஐ.பி.எஸ். அதிகாரி சபீர்கரீம் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.
ஐஏஎஸ் தேர்வில் காப்பியடித்த தமிழக ஐபிஎஸ் அதிகாரி சபீர்கரீம் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கம்
x
கேரள மாநிலம் கொச்சி வயல்காரா கிராமத்தை சேர்ந்த சபீர்கரீம்  2015 ஆம் ஆண்டு நடந்த இந்திய குடிமைப்பணித் தேர்வில் 112 வது ரேங்க் எடுத்தார். இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கூடுதல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட சபீர்கரீம் அங்கு பணிபுரிந்து வந்தார். ஐ.பி.எஸ். பயிற்சியின் போது முதுகில் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்திய ஆட்சிப்பணிக்கு கடந்த ஆண்டு தேர்வெழுதினார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற இந்திய குடிமைப் பணி பிரதான தேர்வின் போது காப்பியடித்ததாக நாங்குனேரி ஏ.டி.எஸ்.பி. சபீர்கரீம் கைது செய்யப்பட்டார். எழும்பூர் காவல் நிலையத்தில் இருந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. ராஜேந்திரன் உத்தரவிட்ட நிலையில், சபீர்கரீமை இடைநீக்கம் செய்து உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டார். இந்நிலையில், சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சக மற்றும் மத்திய பணியாளர் தேர்வாணைய அதிகாரிகளின்  விசாரணையில் சபீர்கரீம் காப்பியடித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சபீர்கரீம் நிரந்தரமாக பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பணியில் உள்ள ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி நிரந்தரமாக நீக்கப்படுவது தமிழக உயர் காவல்துறை அதிகாரிகள் வரலாற்றில் இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.



Next Story

மேலும் செய்திகள்