தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : விசாரணை குழு தலைவராக வஜீர்தர் நியமனம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த விசாரணை குழுவின் தலைவராக பஞ்சாப் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வஜீர்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : விசாரணை குழு  தலைவராக வஜீர்தர் நியமனம்
x
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்ட அரசாணையை எதிர்த்து, வேதாந்தா குழுமம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை அணுகியது. இந்த வழக்கில் ஆலையை ஆய்வு செய்து மீண்டும் செயல்பட அனுமதிக்கலாமா? அல்லது தமிழகஅரசு உத்தரவை அமல்படுத்தலாமா? என்பது குறித்து 6 வாரத்திற்குள் ஆய்வு செய்து உத்தரவிட 3 பேர் கொண்ட குழுவை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த குழுவின் தலைவராக பஞ்சாப் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி வஜீர்தர் நியமிக்கப்பட்டு உள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்