தமிழகத்தில் 63 பொறியியல் கல்லுாரிகள் மூடல்: அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில், 98 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளதாக அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் 63 பொறியியல் கல்லுாரிகள் மூடல்: அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
x
பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில், 98 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளதாக அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அதன்படி, கடந்த ஆண்டு இறுதியில் 550 பொறியியல் கல்லுாரிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது, மொத்த கல்லுாரி எண்ணிக்கையில் 487 மட்டுமே இடம் பெற்றுள்ளன. இதன் மூலம், நடப்பாண்டில் 63 பொறியியல் கல்லுாரிகள் மூடப் பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

 அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லுாரிகள், முன்னணி தனியார் கல்லுாரிகள் என 30 கல்லுாரிகளில் தான் அதிகபட்ச இடங்கள் நிரம்பியுள்ளன. 

120 பொறியியல் கல்லுாரிகளில், 50 முதல் 100 இடங்கள் வரை மட்டுமே நிரம்பியிருக்கின்றன. 47 கல்லுாரிகளில் வெறும் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர்கள் சேர்ந்துள்ளதால், இந்த கல்லுாரிகளும் இந்த ஆண்டே மூடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. 

Next Story

மேலும் செய்திகள்