கடல்பாசி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள்

தூத்துக்குடியில், கடல்பாசி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் போதிய வருவாயின்றி அவதியுறுகின்றனர். அவர்களது வேதனையை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு
கடல்பாசி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள்
x
கடலோடிகளான மீனவர்களின் வாழ்க்கை இன்னும் கண்ணீர் கதை தான். மீன்பிடி தொழிலில் போதிய வருவாய் இல்லாததால், தூத்துக்குடி புதிய துறைமுக பகுதி மீனவர்கள் கடல்பாசி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும், அதிலும் உரிய வருவாய் கிடைப்பதில்லை என்பது வேதனை.நீண்ட கயிற்றில் வரிசையாக கட்டப்படும், பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு இடையே கடற்பாசி துண்டுகள் கட்டி வளர்க்கப்படுகின்றன. 45 தினங்களுக்கு பின்னர் அறுவடை செய்யப்படும் கடல்பாசிகளை உலர வைத்து, மண்ணை அகற்றி மீனவர்கள் விற்பனை செய்கின்றனர். அறுவடைக்கு முன்னர், சில நேரங்களில் ரசாயன கழிவுநீர் கடலில் கலப்பதால், கடல்பாசிகள் முற்றிலும் அழிந்துவிடும் என்கின்றனர் மீனவப் பெண்கள் கிலோ ஒன்றுக்கு 3 ரூபாய்க்கு விற்பனையாவதால், அறுவடை கூலிக்கு கூட வருவாய் கிடைப்பதில்லை என மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கடலோடு கரைந்து போகும் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தமிழக அரசு உதவ வேண்டும் என்பதே கடல்பாசி வளர்ப்பு தொழிலாளர்களின் கோரிக்கையாகும்

Next Story

மேலும் செய்திகள்