"ஹெல்மெட் கட்டாயம்" அரசாணை வெளியிட்டால் மட்டும் போதாது -உயர்நீதிமன்றம்
பதிவு : ஆகஸ்ட் 21, 2018, 03:53 PM
மாற்றம் : ஆகஸ்ட் 21, 2018, 04:03 PM
ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி அரசாணை வெளிட்டால் மட்டும் போதாது அதை நடைமுறைபடுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மோட்டார் சட்ட விதிகளின் படி நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென விதிகள் இருந்தும், அதை அரசு அமல்படுத்தவில்லை என கோரி ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 2007-ல் அரசாணை வெளியிட்டதாக அரசு தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் அரசாணை வெளியிட்டால் மட்டும் போதாது என்றும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.மேலும் இது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து வரும் 23ம் தேதி பதில் மனு தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி : காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி, மதுரையில் காவல்துறை சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

19 views

கட்டாய ஹெல்மெட் - கோவையில் 2,500 வழக்குகள் பதிவு

கோவையில் ஹெல்மெட் அணியாமல் 2 சக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்து சென்றதாக 2 ஆயிரத்து 500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாநகர காவல் ஆணையர் பெரியய்யா தெரிவித்துள்ளார்.

245 views

கட்டாய ஹெல்மெட் உத்தரவு - மக்களின் கருத்து என்ன ?

இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் பயணிப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு குறித்து, மக்கள் என்ன நினைக்கிறார்கள் என தந்தி டிவி நடத்திய கள ஆய்வு முடிவுகள்.

1324 views

"கட்டாய ஹெல்மெட் சட்டம் - கிரண் பேடிக்கு அதிகாரம் இல்லை"

புதுச்சேரியில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த உத்தரவு போடும் அதிகாரம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு இல்லை என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

47 views

பிற செய்திகள்

புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு

புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு

9 views

கஜா புயல் நிவாரண நிதி சேகரிக்க சிம்பு யோசனை...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவுவதற்கு, நிவாரண நிதி திரட்ட நடிகர் சிம்பு, புதிய யோசனையை வெளியிட்டு உள்ளார்.

962 views

கல்பாக்கம் 2 - வது அணு உலை நிறுத்தம்

பராமரிப்பு பணிக்காக கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் 2 - வது அணு உலை நிறுத்தப்பட்டு உள்ளது.

79 views

நடிகர் - நடிகைகள் 1000 கிலோ அரிசி உதவி

கஜா புயலில் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நடிகர் - நடிகைகள் சார்பில், ஆயிரம் கிலோ அரிசி சேகரிக்கப்பட்டு, சென்னையில் இருந்து வேன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

503 views

வனத்துறை தேர்வை ஒத்திவையுங்கள் - ராமதாஸ்

கஜா புயலால் 7 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வருகிற 25ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ள வனத்துறை தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

26 views

கொடுமுடியாறு - நம்பியாறு அணைகள் நாளை திறப்பு

நெல்லை மாவட்டம் கொடுமுடியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் நாளை வியாழக்கிழமை முதல் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.