மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு...

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 1.50 லட்சம் கனஅடியில் இருந்து 1 லட்சம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு...
x
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நேற்று மேட்டூர் அணைக்கு வரும்  ஒரு லட்சத்து 50 ஆயிரம் கனஅடி நீர் அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது.16 கண் மதகு வழியாக உபரிநீர் ஆர்ப்பரித்து வெளியேறியது.இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோர கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் தண்ணீர் வரத்து குறைந்ததை அடுத்து மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை 1 லட்சம் கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்