அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி : மானாமதுரையில் சிலை தயாரிக்கும் பணிகள் மும்முரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சிலை தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி : மானாமதுரையில் சிலை தயாரிக்கும் பணிகள் மும்முரம்
x
அடுத்த மாதம் 13ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக மானாமதுரையில் சுமார் 100 க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  ஆர்டர்களுக்கு ஏற்ப 2 அடி உயரம் முதல் 16 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் திண்டுக்கல், இராமநாதபுரம், உள்ளிட்ட ஏராளமான மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.ரசாயனம் இல்லாமல் இயற்கையான முறையில் சிலைகள் தயாரிக்கப்படுவதால், சிலைகள் எளிதில் தண்ணீரில் கரையும் என சிலை தயாரிக்கும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்