பொறியியல் படிப்புக்கு 5 கட்ட ஆன்லைன் கலந்தாய்வு முடிவு : 70 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை

பொறியியல் படிப்புக்கு ஐந்து கட்டமாக ஆன்லைன் கலந்தாய்வு நடைபெற்று முடிவடைந்த நிலையில் 70 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்தனர்.
பொறியியல் படிப்புக்கு 5 கட்ட ஆன்லைன் கலந்தாய்வு முடிவு : 70 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை
x
தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த மாத இறுதியில் துவங்கியது. நான்கு கட்டமாக நடந்த கலந்தாய்வில் ஏற்கனவே 51 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்தனர். இந்நிலையில் 5 -வது ஆன்லைன் கலந்தாய்வு முடிவுற்றது. இதுகுறித்த முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டது. அதில், 21 ஆயிரத்து 647 மாணவர்களுக்கு, தற்காலிக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி ஒதுக்கீட்டின் போது, 3 ஆயிரம் மாணவர்கள், ஏற்கனவே எடுத்த இடங்களை ரத்து செய்யலாம் என தெரிகிறது.  இறுதியில் 70 ஆயிரம் மாணவர்கள் பொறியியல் படிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அரசு ஒதுக்கீட்டில் 1 லட்சம் இடங்கள் காலியாக உள்ள நிலை ஏற்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்