"மழை வெள்ள பாதிப்பை தடுக்க துணை ராணுவம்" - தமிழக அரசுக்கு ராமதாஸ் யோசனை

மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க, மத்திய துணை ராணுவப் படைகளை அழைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
மழை வெள்ள பாதிப்பை தடுக்க துணை ராணுவம் - தமிழக அரசுக்கு ராமதாஸ் யோசனை
x
தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.அடுத்தடுத்த நாட்களில் கேரளம் மற்றும் கர்நாடகத்தில் மழை அதிகரிக்கும் என்பதால் தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படலாம் என குறிப்பிட்டுள்ள ராமதாஸ்,  இதனால், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு  3 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.எனவே, அத்தகைய சூழலை சமாளிக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே மேற்கொள்ள வேண்டும் என்றும், வெள்ள பாதிப்புகளை தடுக்க தேவைப்பட்டால் மத்திய துணை ராணுவப் படைகளை முன்கூட்டியே அழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்