திருமணத் தடையை நீக்கும் ஸ்ரீபிடாரி மீனாட்சி அம்மன்...

திருமணத் தடையை நீக்கும் ஸ்ரீபிடாரி மீனாட்சி அம்மன் கோயிலின் சிறப்புகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...
திருமணத் தடையை நீக்கும் ஸ்ரீபிடாரி மீனாட்சி அம்மன்...
x
புதுச்சேரி மாநிலம் ஊசுடு தொகுதிக்குட்பட்ட தொண்டமாநத்தம் பகுதியில் இருக்கிறது நூற்றாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீபிடாரி மீனாட்சி அம்மன் கோயில்...அந்த பகுதி மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றித் தரும் தெய்வமாக இருக்கிறாள் இந்த பிடாரி...சுமார் 750 வருடங்களுக்கு முன்பு வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட தெய்வமான பிடாரி அம்மன், பின்னாளில் ஸ்ரீபிடாரி மீனாட்சி அம்மனாக உருவெடுத்து அருள்பாலித்ததாக வரலாறு கூறுகிறது...ஆண்டு தோறும் நடக்கும் பிரம்மோற்சவ விழா இங்கு பிரசித்தம். அங்கப் பிரதட்சணம் செய்தும், மலர் மாலை சாத்தியும் அம்பாளை வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உண்டு...திருத்தேர் வீதி உலா என்பது இங்கு நடக்கும் பிரம்மாண்ட விழாவாகவே மக்களால் கொண்டாடப்படுகிறது. கிடா வெட்டி அம்பாளுக்கு படைத்தால் எல்லா நோய்களும் நீங்கி நல்வாழ்வு கைகூடும் என்கிறார்கள்...ஆலயத்தின் உள்ளே உற்சவரை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு அம்மன் சிலைகளும், அர்த்த நாரீஸ்வரர் சிலையும் பக்தர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டி நிற்போர், வியாபாரம் சிறப்பாக நடக்க விரும்புவோர், நோய் நொடியின்றி வாழ நினைப்பவர்கள் இந்த அம்பாளை வணங்கிச் செல்கின்றனர். அம்பாளுக்கு நெய் விளக்கேற்றி, அன்னதானம் செய்யும் பக்தர்களுக்கு அனைத்து நன்மைகளும் கைகூடுகிறதாம்... உருவத்தில் காளியாக இருந்தாலும் மக்களின் மனதில் சாந்த சொரூபிணியாக, அருள்கொடுக்கும் அம்பாளாகவே உறைந்திருக்கிறாள் பிடாரி மீனாட்சி... 



Next Story

மேலும் செய்திகள்